விநாயகர் சதுர்த்தி: 380 கணபதி சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு.!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டி 380 கணபதி சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. கூட்ட நெரிசலை சமாளிக்க கணபதி சிறப்பு ரயில்கள் கடந்த 11ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

Central Railway Festival Travel

சென்னை :விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, இந்திய ரயில்வே கடந்த ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 6 வரை 380 கணபதி சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் பயணிகளின் பண்டிகை பயணத்தை சீராகவும் வசதியாகவும் மாற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் பிராந்தியங்களில் வருகின்ற ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை கணபதி பூஜை கொண்டாடப்படுவதை ஒட்டி, 296 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.  கடந்த 2023ம் ஆண்டில் மொத்தம் 305 கணபதி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்த சிறப்பு ரயில்கள், குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விழாவை கொண்டாட பயணிக்கும் பக்தர்களுக்கு பெரிதும் உதவுகிறது. மேலும், இந்த ரயில்களின் முழு அட்டவணையை IRCTC இணையதளம், Rail One செயலி மற்றும் கணினிமயமாக்கப்பட்ட PRS மையங்களில் பார்க்கலாம்.