பாஜக – காங்கிரஸ் கட்சியினர் மோதல்.! கன்னியாகுமரி பாஜக மாவட்ட தலைவர் கைது.!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டரில், “நான் கொரோனா நோயின் லேசான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனையின்படி, அடுத்த சில நாட்களுக்கு நான் எனது வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்றுவேன். நீங்கள் அனைவரும் கவனித்து, கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா பரிசோதனையில் எனக்கு பாசிடிவ் என வந்துள்ளது. இந்நிலையில், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் முழுவதுமாக தனிமையில் இருக்கிறேன்” என்று ராஜே ட்வீட் செய்துள்ளார். மேலும் அந்த பதிவில், “என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது 189 பேர் சிகிச்சையில் உள்ளனர்.