#BREAKING: முப்படைகளின் தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் மீண்டும் முக்கிய ஆலோசனை

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் சுமார் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும், சீன ராணுவம் தரப்பில் சுமார்40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் என்றும் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.முப்படை தலைமை தளபதி, வெளியுறவுத்துறை அமைச்சர், முப்படை தளபதிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.நேற்று இரவு பிரதமருடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.