இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானத்தில் முதன் முதலாக பறந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ் போர் விமானத்தில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பயணித்து உள்ளார்.
இந்த தேஜஸ் ( Light Combat Aircraft -LCA) போர் விமானமானது, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகள் லிமிடெட் நிறுவனம் மூலம் முழுக்க முழுக்க இந்தியாவில் தாயாரிக்கப்பட்டுள்ள்ளது. இந்த விமானமானது இந்த வருடம் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற ஏரோ இந்தியா ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த தேஜஸ் விமானம் இந்திய தொழில்நுட்பத்துடன்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 2,205 கிமீ வேகத்தில் இந்த விமானம் பறக்கும் வல்லமை கொண்டது. இதில் இரு இருக்கைகள் மட்டுமே இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விமானத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடகாவில் உள்ள பெங்களூரு, HAL விமான நிலையத்தில் இருந்து பயணித்து சோதனை செய்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025