கடும் அமளி – 8வது நாளாக ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைப்பு.!

கடும் அமளிக்கு மத்தியில் ராஜ்யசபா இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

கடும் அமளிக்கு மத்தியில் ராஜ்யசபா இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற விசாரணைக்கான எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மற்றும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற ஆளும் காட்சி உறுப்பினர்களின் கோரிக்கை காரணமாக, அமளி ஏற்பட்டதால் லோக்சபா மற்றும் ராஜ்யசபா பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

8வது நாளாக ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைப்பு:

தற்போது, லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கும், அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கும் பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மக்களவை 6 மணி வரை ஒத்திவைப்பு:

பின்னர், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் மக்களவை மாலை 6 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  இதற்கிடையில், சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரின் 92வது தியாக தினமான இன்று ராஜ்யசபாவில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.