மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் விளக்கமளிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு.
நாட்டில் பல்வேறு பரபரப்பான சூழல்களுக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. 12 மணிக்கு தொடங்கிய மாநிலங்களவையில், மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமை குறித்து குறுகிய நேரம் விவாதம் நடத்தப்படும் என்ற மாநிலங்களவை தலைவரின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதாவது, நாள் முழுவதும் மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க வேண்டும், பிரதமர் இரு அவைக்கும் வந்து விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின், மக்களவை பிற்பகல் 2 மணி வரைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
