நான் உயிரோட தான் இருக்கிறேன்.! இமயமலையில் காணாமல் போன இந்தியர் மீட்பு...

நேபாளத்தின் அன்னபூர்ணா மலையில் காணாமல் போன இந்திய மலையேறுபவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

நேபாளத்தின் அன்னபூர்ணா மலையில் காணாமல் போன இந்திய மலையேறுபவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

நேபாளம் நாட்டில் அமைந்துள்ள அன்னபூர்ணா மலை இமயமலைத் தொடரின் துணைத் தொடரில் உள்ள ஒரு மலை ஆகும். 8,091 மீட்டர்கள் (26,545 அடிகள்) உயரம் கொண்ட இது உலகின் பத்தாவது உயரமான மலையாக திகழ்கிறது.  இமயமலைச் சிகரங்களை ஏறுவதும் அவற்றின் அடிவாரத்தில் நடைபயணம் மேற்கொள்வதும் பிரபலமான சாகச விளையாட்டுகளாகும்.

unknown node

இந்நிலையில், கடந்த வாரம் இந்த அன்னபூர்ணா மலையில் இருந்து இறங்கும் போது, காணாமல் போன இந்திய மலையேறும் வீரர் அனுராக் மாலூ என்பவர் தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் காணாமல் போன அவர், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக அவரது சகோதரர் சுதிர் கூறியுள்ளார்.

unknown node

மலையேறும் வீரர்  அனுராக் மாலூ கடந்த வாரம் அன்னபூர்ணா மலையில் ஏற புறப்பட்டார். ஆனால் ஏப்ரல் 17 அன்று அவர் கீழே இறங்கும் போது, 6,000 மீட்டர் உயரத்தில் இருந்தபோது கீழே விழுந்ததாக கூறபடுகிறது.

unknown node

இதற்கிடையில், அனுராக் மாலூ  காணாமல் போன தினத்தன்று, 10 முறை வெற்றிகரமாக எவரெஸ்ட் ஏறிய  வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த மலையேறும் வீரர் ஒருவர் உலகின் 10-வது உயரமான சிகரமான அன்னபூர்ணா உச்சியில் இருந்து இறங்கும் போது, உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியது.