மத்திய அமைச்சரவையில் மறு சீரமைப்பு.! பிரதமர் மோடி சொல்வதென்ன.?

நாடாளுமன்ற தேர்தலுக்கு மத்தியில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் ஆளும் பாஜக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், மூத்த

PM Modi meets Council

நாடாளுமன்ற தேர்தலுக்கு மத்தியில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் ஆளும் பாஜக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் மோடி தலைமையில், டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து எதுவும் விவாதிக்கவில்லை என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அந்த கூட்டத்தில் VISION – 2047 திட்டத்துடன் தொடர்புடைய 16 முக்கிய துறைகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்னும் சில மாதங்களில் தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மோடி சில வழிகாட்டுதல்களை வழங்கியதாக கூறப்படுகிறது.