சுவாச பிரச்சனை : மருத்துவமனையில் 60 குழந்தைகள் அனுமதி; 3 பேர் உயிரிழப்பு!

Three children admitted to West Bengal have died due to respiratory problems and fever.

மேற்கு வங்கத்தில் சுவாச பிரச்சனை மற்றும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனை காரணமாக 60 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், ஏற்கனவே சுமார் 200 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பல பகுதிகளிலும் தொடர்ந்து இது போன்று குழந்தைகள் சுவாசப் பிரச்சனை இருமல், சளி, காய்ச்சல் ஆகியவற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், இந்த குழந்தைகள் உடல் பலவீனமடையும் போது உயிரிழந்து விடுகின்றனர் என தெரிவித்துள்ளனர். மேலும் அவர் கூறுகையில், குழந்தைகளின் நீர் மற்றும் இரத்த மாதிரிகளை எடுத்து வருவதாகவும், குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த திடீர் காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சனைக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.