கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு பணவீக்கத்துக்கு மேலும் வழிவகுக்கும் ...! ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு பணவீக்கத்துக்கு மேலும் வழிவகுக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார். நேற்று  மும்பையில் நடைபெற்ற

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு பணவீக்கத்துக்கு மேலும் வழிவகுக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.

நேற்று  மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு ஆய்வுக்கூட்டத்திற்கு பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறுகையில்,  கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு பணவீக்கத்துக்கு மேலும் வழிவகுக்கும் .அதேபோல் உள்நாட்டு பொருளாதார அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டிய கட்டாய  சூழல் தற்போது எழுந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு சில வளரும் நாடுகளை காட்டிலும் மோசமாகவில்லை. இது போன்ற நிலையற்ற சூழல் நிலவும்போது ரிசர்வ் வங்கியின் வேலை அபரிமிதமான ஏற்ற இறக்கங்கள் ஏற்படாமல் பார்த்துகொள்வதுதான் என்றும்  ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.