கர்நாடகாவில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு...! பெங்களூரில் பெரும்பாலானோருக்கு தொற்று உறுதி...!

In Karnataka yesterday alone, 50,112 new cases were confirmed. Of these, 23,106 have been confirmed infected in Bangalore alone.

கர்நாடகாவில் நேற்று மட்டும், 50,112 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், பெங்களூரில் மட்டும், 23,106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட மறுக்கும் மக்களின் அலட்சிய போக்கு தான், அதிகளாவிலான தொற்று பரவுவதற்கு காரணமாகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், 4,12,262 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3,980 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில், கர்நாடகாவில் நேற்று மட்டும், 50,112 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், பெங்களூரில் மட்டும், 23,106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 26,841 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 346 உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.