சுஷாந்த் சிங் மரண வழக்கு..மீண்டும் விசாரணைக்கு ஆஜரான ரியா சக்ரபோர்த்தி.!

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் வழக்கில் அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்திக்கும் தொடர்பு இருப்பதாக பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜு நகர் காவல் நிலையத்தில் சுஷாந்த் சிங்கின் தந்தை புகார் கொடுத்தார். மேலும், சுஷாந்த் சிங் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.15 கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது எனவும் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 8 மணி நேரம் ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை நடைபெற்றது. ரியா சக்ரபோர்த்தி உடன் சேர்த்து ரியாவின் தந்தை இந்திரஜித், சகோதரர் ஷோவிக்விடமும் விசாரணைநடைபெற்றது.
பின்னர், நேற்று முன்தினம் (அதாவது சனிக்கிழமை ) மதியம் ரியாவின் சகோதரர் ஷோவிக்கை மீண்டும் விசாரணைக்கு அமலாக்கத்துறை அழைத்தனர், அவரிடம் சுமார் 18 மணி நேரம் விசாரணை முடிந்த பிறகு நேற்று (ஞாயிற்றுகிழமை) காலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார்.
இந்நிலையில், இன்று நடிகை ரியா சக்ரபோர்த்தி, அவரது தந்தை இந்திரஜித், சகோதரர் ஷோவிக் ஆகியோர் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார்கள். கடந்த வெள்ளிக்கிழமை ரியா கொடுத்த தகவல் படி அவரின் வருமானத்தை விட அதிகமாக அவர் வாங்கிய சொத்து இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025