பூஞ்ச் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு தலா 1 கோடி நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று முன் தினம் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தபோது தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியது, இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
unknown nodePoonch Kashmir [Image Source : Jagran]
தற்போது, தாக்குதலில் உயிரிழந்த பஞ்சாபைச் சேர்ந்த நான்கு ராணுவ வீரர்களின் அடுத்த உறவினர்களுக்கு அரசு வேலையுடன் தலா ரூ.1 கோடி நிவாரண தொகை வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
unknown nodeமுன்னதாக, இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஒருவரான ஓடிசாவை சேர்ந்த லான்ஸ் நாயக் தேபாஷிஷ் பஸ்வாலின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.
unknown nodeJammu Kashmir Poonch ARMY [Image Source : Twitter]
வீரமரணம் அடைந்த வீரர்களில் லூதியானா மாவட்டத்தில் உள்ள சன்கோயன் ககான் கிராமத்தைச் சேர்ந்த ஹவில்தார் மன்தீப் சிங், மோகா மாவட்டத்தில் உள்ள சாரிக் கிராமத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் குல்வந்த் சிங், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தல்வண்டி பரத் கிராமத்தைச் சேர்ந்த சிபாய் ஹர்கிரிஷன் சிங் மற்றும் பதிண்டா மாவட்டத்தில் உள்ள பாக் கிராமத்தைச் சேர்ந்த சிபாய் சேவக் சிங் ஆகியோர் அடங்குவர்.