சபரிமலை சீராய்வு மனு...!நவம்பர் 13 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில்  விசாரணை...!

சபரிமலை கோயில் சீராய்வு மனு நவம்பர் 13 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில்  விசாரணைக்கு வருகிறது. கடந்த செப்டம்பர் 28 ஆம்  தேதி  கேரளா மாநில சபரிமலை ஐயப்பன்

சபரிமலை கோயில் சீராய்வு மனு நவம்பர் 13 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில்  விசாரணைக்கு வருகிறது.கடந்த செப்டம்பர் 28 ஆம்  தேதி  கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

unknown node

இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது.பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில்  இதுவரை 19 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் சபரிமலை தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் நவம்பர் 13 ஆம் தேதி விசாரணை செய்கிறது  உச்சநீதிமன்றம்.