சதாப்தி, ராஜதானி ஆகிய ரயில்களில் உணவு கட்டணம் அதிகரிப்பு ..!

ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரான்டோ  ஆகிய ரயில்களில் வழங்கப்படும் உணவு விலையை ரயில்வே அதிகரித்துள்ளது. இந்த ரயில்களின் முதல்  ஏசி மற்றும் இசி பெட்டிகளில் காலை

ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரான்டோ  ஆகிய ரயில்களில் வழங்கப்படும் உணவு விலையை ரயில்வே அதிகரித்துள்ளது. இந்த ரயில்களின் முதல்  ஏசி மற்றும் இசி பெட்டிகளில் காலை தேநீர் ரூ.35, காலை உணவு ரூ.140  , மதிய உணவு மற்றும் இரவு உணவின் விலை ரூ. 245 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.முன்பு இருந்த விலை பட்டியலுடன் ஒப்பிடும்போது குறைந்தபட்சம் 7 ரூபாயும், அதிகபட்சமாக 15 ரூபாய் வரையிலும் உயா்த்தப்பட்டுள்ளது.இதேபோல் இந்த ரயில்களின் இரண்டாம்  ஏசி, மூன்றாம்  ஏசி மற்றும் சிசி பெட்டிகளுக்கும் கேட்டரிங் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது.அதன் படி தேநீா் ரூ. 20, காலை உணவு- ரூ.105, பிற்பகல் மற்றும் இரவு உணவின் விலை ரூ. 185-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.முன்பு இருந்த விலை பட்டியலுடன் ஒப்பிடும்போது குறைந்தபட்சம் 5 ரூபாயும், அதிகபட்சமாக 10 ரூபாய் வரையிலும் உயா்த்தப்பட்டுள்ளது.