Sanatana Dharma Issue : சனாதன சர்ச்சை கருத்து.! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பீகாரில் வழக்குப்பதிவு.!

அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன கொள்கை பற்றி தனது விமர்சனத்தை முன்வைத்தார். சனாதனம் என்பது டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இவரது பேச்சுக்கு கடும் கண்டங்களை பாஜக உள்ளிட்ட பாஜக ஆதரவு அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.
சனாதன கொள்கை பற்றி பேசியதற்காக தன் மீது வழக்குகள் போட்டாலும் அதனை சட்டப்படி எதிர்கொள்வேன். எனது கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என அமைச்சர் உதயநிதி அண்மையில் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் சுதிர்குமார் ஓஜா என்பவர் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக புகார் அளித்துள்ளார். மேலும் முசாபர்பூர் காவல்நிலையத்திலும் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பிரச்னை ஏற்படுத்தும் வகையில் பேசுவது, பிரிவினைவாத பேச்சுக்கள், மத நம்பிக்கையை புண்படும் வகையில் பேசியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025