தொடங்கியது சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் – பிரதமர் மோடி வாழ்த்து.!

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் தொடக்க விழா இன்று சோம்நாத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில், குஜராத் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

unknown node

தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, சௌராஷ்டிராவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான பிணைப்பு மிகவும் பழமையானது மற்றும் வலுவானது என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node

தமிழ்நாட்டிற்கும் குஜாராத்திற்கும் இடையிலான 100 ஆண்டுகள் கடந்த உறவு குறித்தும் தமிழ்நாட்டில் குடியேறிய சௌராஷ்டிரா மக்களின் வாழ்க்கை தரம் குறித்தும் மாநில மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் என்னும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

unknown node

இந்நிகழ்ச்சி, ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை குஜராத்தின் பல பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களின் குறிப்பிடத்தக்க சங்கமம் தான் சௌராஷ்டிர தமிழ் சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.