மத்திய பிரதேசத்தில் பள்ளி வாகனம் கவிழ்ந்து 1 மாணவர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் பள்ளிப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவர் உயிரிழப்பு மற்றும் 12பேர் காயமடைந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் பள்ளிப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவர் உயிரிழப்பு மற்றும் 12பேர் காயமடைந்துள்ளனர்.

சாகர் மாவட்டத்தில் உள்ள சந்திரபூர் கிராமத்தில், தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரென்டென்ட் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

2 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவர் ஒருவர் கூறிய தகவலின் படி ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியது தெரிய வந்துள்ளது.

காயம் ஏற்பட்டுள்ள மாணவர்கள் பந்தல்கண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

unknown node