உ.பியில் பரபரப்பு.! முக்கிய கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் எம்.பியின் மகன் போலீஸ் என்கவுண்டரில் பலி.!

உ.பியில் வழக்கறிஞர் உமர் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் எம்.பியின் மகன் ஆசாத் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழந்தார்.

உ.பியில் வழக்கறிஞர் உமர் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் எம்.பியின் மகன் ஆசாத் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழந்தார்.

2005இல் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜூபால் என்பவரது கொலையில் முக்கிய சாட்சியாக இருந்த உமர் பால் எனும் வழக்கறிஞர், கடந்த பிப்ரவரி மாதம் அவரது வீட்டருகே வைத்து மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்பியாக இருந்து பின்னர் மாஃபியா கும்பலாக மாறிய அத்திக் அகமது, அவரது சகோதரர் காலித் அசீம் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

முதல் என்கவுண்டர் :

உமர்பால் கொலை வழக்கில்,  உடனடியாக காவல் துறை நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளில் ஒருவரான முகமது அர்பாஸ் எனும் 22வயது இளைஞரை  பிரயாக்ராஜ் போலீஸார் சுற்றிவளைத்தனர். அப்போது நடந்த என்கவுன்ட்டரில் அர்பாஸ் உயிரிழந்தார்.

உஸ்மான் சவுத்ரி :

அதனை அடுத்து கடந்த மார்ச் மாதம் மற்றொரு குற்றவாளியான விஜய் குமார் என்கிற உஸ்மான் சவுத்ரி எனும் 27 வயது இளைஞரை காவல்துறையினர் பிடித்தனர். அப்போது நடந்த என்கவுண்டரில் உஸ்மான் சவுத்திரி படுகாயமுற்று, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டார்.

ஆசாத் என்கவுண்டர் :

தற்போது , உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு குற்றவாளியான  முன்னாள் எம்பி அதிக் அகமதுவின் மகன் ஆசாத் உத்தரப் பிரதேச காவல்துறையினரால் இன்று ( வியாழக்கிழமை ) ஜான்சியில் வைத்து என்கவுன்டர் செய்யப்பட்டார்.  அதில் ஆசாத் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்னொரு குற்றவாளி :

தேடப்பட்டு வந்த மற்றொரு குற்றவாளியான குலாமும் உ.பி  சிறப்பு அதிரடிப்படையின் என்கவுன்டரின் போது சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறப்பு கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.