தீவிர மோன்தா புயலாக வலுவடைந்தது...வானிலை மையம் முக்கிய தகவல்!

புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக் கூடும்

MONTHA cyclone coming

சென்னை :நேற்று முன் தினம் (26-10-2025) காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று முன்தினம் இரவு 23 30 மணி அளவில் “மோன்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (27-10-2025) காலை 0830 மணி அளவில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 520 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 570 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவிலும், போர்ட் ப்ளேயரிலிருந்து (அந்தமான் தீவுகள்) மேற்கே 850 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

மசூலிப்பட்டினம் இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (28-ஆம் தேதி) காலை தீவிரப்புயலாக வலுப்பெற்று, மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக இன்று  மாலை இரவு நேரத்தில் கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த மோன்தா புயல் தீவிர புயலாக வலுவடைந்தது எனவும்,  மோன்தா புயல், ஆந்திராவின் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே இன்றிரவு தீவிரப்புயலாக கரையை கடக்க கூடும் என்றும்புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.