அதிர்ச்சி...பெற்ற மகளை 25 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கொடூர தந்தை...பகீர் வீடியோ.!!

சூரத்தின் வதோதரா பகுதியில் பெற்ற மகளை தந்தையே கொன்ற அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

Man kills daughter

சூரத்தின் வதோதரா பகுதியில் பெற்ற மகளை தந்தையே கொன்ற அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

சூரத்தில் உள்ள சத்யா நகர் சொசைட்டியில் ஒரு வாடகை குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் ராமானுஜா. இவருடைய மகள் மொட்டை மாடியில் தூங்குவது தொடர்பாக ராமானுஜருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கருத்து வேறுபாடு விரைவில் தீவிரமடைந்தது, இதன் விளைவாக ராமானுஜா கையில் வைத்திருந்த கத்தியை வைத்து பெற்றமகள் என்று கூட பார்க்காமல் 25 முறை கத்தியால் குத்தி தனது மகளை கொடூரமாக கொன்றார். தடுக்க தன்னுடைய  மனைவியையும் கத்தியால் வெட்டி காயப்படுத்தினார்.

இது தொடர்பான பகீர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குடும்பத் தகராறில் தனது மகளை கத்தியால் குத்திக் கொன்றதற்காகவும், அவரது மனைவியை காயப்படுத்தியதற்காகவும் ராமானுஜா கைது செய்யப்பட்டார். சொந்த மகளையே தந்தை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

unknown node