#BREAKING: ஹைதராபாத்தில் தனியார் வங்கி ஏடிஎம்-ல் துப்பாக்கிச்சூடு..!

ஹைதராபாத்தில் தனியார் வங்கி ஏடிஎம்-ல் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் காயம்.

ஹைதராபாத்தில் தனியார் வங்கி ஏடிஎம்-ல் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் காயம்.

சைபராபாத் போலீஸ் எல்லைக்குட்பட்ட குகட்பள்ளியில் உள்ள எச்.டி.எஃப்.சி வங்கி ஏடிஎம்மில் வங்கி ஊழியர்களால் பணத்தை நிரப்பி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒரு பாதுகாவலர் மற்றும் வங்கி அதிகாரி காயமடைந்தனர்.

காயமடைந்த இருவருமே மருத்துவமனைக்கு அழைத்து செல்லபப்ட்டனர். அங்கு அவர்களின் நிலை சீராகிவிட்டதாக கூறப்படுகிறது. கொள்ளையர்கள் பணத்தை திருடி கொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் நடைபெற்றது.

இந்த சம்பவம் பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் ஒரு கொள்ளைக் கும்பல் இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அங்கு உள்ள சி.சி.டி.வி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

காவல்துறையினரிடமிருந்து ஒரு குழு சம்பவ இடத்திற்குச் சென்று ஆதாரங்களை சேகரித்தது. மேலும் விவரங்களை சேகரிக்க காயமடைந்தவர்களின் அறிக்கைகள் விரைவில் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.