மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க நிதி இல்லை – மத்திய அரசு

ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு வழங்க போதிய நிதி இல்லை என்று மத்திய ராசு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு வழங்க போதிய நிதி இல்லை என்று மத்திய ராசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரண்டாவது நாளான இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநில அரசுகளுக்கு வழங்க போதுமான நிதியில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் மாநிலங்களவையில் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிவில் தகவல் கூறப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி வசூல் குறைவாக இருப்பதால், தற்போது இழப்பீடு தொகையை வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையாக மத்திய அரசு ரூ.1.51 லட்சம் கோடி வழங்க வேண்டியுள்ளது. இதில், தமிழகத்துக்கு மட்டும் ரூ.11,700 கோடி ஜிஎஸ்டி இழப்பிடாக மத்திய அரசு தர வேண்டியுள்ளது. மேலும் ஜிஎஸ்டி வசூல் குறைவாக இருக்கும் காலங்களில் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது அவசியமா என சட்ட ஆலோசனையில் கேள்வி எழுப்பப்பட்டது.