ஆம்பன் புயல் தாக்கத்தால், ஒடிசா மாநிலத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், அங்கு பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சரிந்துள்ளது.
வங்க கடலில் உருவான ஆம்பன் புயல், சூப்பர் புயல் போல வலுப்பெற்றது. தற்பொழுது அது வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயல் தற்பொழுது மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
தற்பொழுது அங்கு 150-160 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால், பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த புயல், மேற்கு வங்கத்தில் சுந்தரபான்ஸ் காடுகளை கடந்து, உட்பகுதியில் மாலை 7 மணிக்கு புயல் வலுஇழப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம், பாரதிப் பகுதியில் ஆம்பன் புயல் தாக்கம் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மேலும், பல இடங்களில் வேருடன் மரங்கள் சாய்ந்து வரும் நிலையில், பல இடங்களில் மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளது. இந்த புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேற்கு வங்கத்தில் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டதாகவும், ஒடிஷாவில் 1,58,640 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக என்.டி.ஆர்.எஃப் தலைவர் தெரிவித்தார்.
மேலும், ஃபானி புயலின் போது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையிலே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளளவுள்ளதாக என்.டி.ஆர்.எஃப் தலைவர் தெரிவித்தார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…