ஒடிசா மாநிலத்தின் பெர்ஹாம்பூர் பகுதியில் தெருநாய்களால் விடாமல் துரத்தியதில் விபத்து ஏற்பட்துள்ளது. விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ” 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை ஸ்கூட்டரில் வேகமாக செல்கிறார்கள்.
unknown nodeஅவர்களுக்கு பின்னே சில தெருநாய்கள் குரைத்து கொண்டே அவர்களை துரத்தி கொண்டு வருகிறது. இதனால் பதட்டம் அடைந்த அந்த பெண் முன்னாடி இருக்கும் காரை கவனிக்காததால் ஸ்கூட்டர் கார் மீது வேகமாக மோதியது. இதனால், ஸ்கூட்டரில் இருந்த ஒரு சிறுவன் 2 பெண்கள் உட்பட மூன்று பெரும் தூக்கி வீசப்பட்டனர்.
அதில், துரத்தி வந்த தெருநாய்களில் ஒன்றும் ஸ்கூட்டரின் கீழ் சிக்கியது.விபத்தில் காயம் அடைந்த அந்த சிறுவன் கதறி அழுகிறான்.” இந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ தற்போது காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வீடியோவை பார்த்த பலரும் “ஆபத்தை விளைவிக்க கூடிய வகையில் சுற்றித் திரியும்தெருநாய்கள்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்” என அரசு தரப்புக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.