டெல்லி மாயாபுரி பகுதியிலுள்ள தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…!

டெல்லி மாயாபுரி பகுதியிலுள்ள தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள மாயாபுரி பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ தொழிற்சாலை முழுவதிலும் மளமளவென பரவ தொடங்கியதை அடுத்து தொழிற்சாலையின் பல பகுதிகள் எரிந்து நாசமாகி உள்ளது.
இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்நிலையில், இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எதுவும் தகவல் வெளியாகவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025