நீட் தேர்வு ஒத்திவைப்பு வழக்குகளை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!

The Supreme Court has dismissed the cases filed seeking postponement of NEET examination.

நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இந்நிலையில், இதற்காக கடந்த ஜூலை 13-ஆம் தேதி மாலை 5 மணி முதல் விண்ணப்பிக்கும் பணி தொடங்கி, ஆகஸ்ட் 14ம் தேதி வரையில் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வேறு சில படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வும் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறுவதால் நீட்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஒரு சில பேர் கேட்கிறார்கள்  என்பதற்காக 16 லட்சம் பேர் எழுதக்கூடிய நுழைவுத் தேர்வை ஒத்தி வைக்க இயலாது எனக் கூறி, நீட் தேர்வு ஒத்திவைப்பு தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.