ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம்!

ஞானவாபி மசூதியில், இந்திய தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Gyanvapi mosque

ஞானவாபி மசூதியில், இந்திய தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில், தொல்லியல் துறை ஆய்வு நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி, மசூதியில் ஆய்வுக்கு அனுமதிக்க கூடாது என்ற இஸ்லாமிய அமைப்பு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சில நிபந்தனைகளின் கீழ் ஞானவாபி மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து, தற்போது ஞானவாபி மசூதியில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இன்று தொல்லியல் துறை ஆய்வை தொடங்கியுள்ளனர்.

இதனிடையே, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அன்சமன் மசூதி அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். தற்போது, ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) அறிவியல் ஆய்வு நடத்த அனுமதியளிக்கப்பட்ட உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

எந்தவொரு அகழ்வாராய்ச்சி மற்றும் கட்டமைப்பிற்கு எந்த சேதமும் ஏற்படாமல் முழு கணக்கெடுப்பும் முடிக்கப்படும் என்று இந்திய தொல்லியல் துறை தெளிவுபடுத்தியதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.