கொலை வழக்கில் தலைமறைவான சுஷில் குமார் இன்று கைது..!

டெல்லி தனிப்படை போலீசார் சுஷில் குமாரை கைது செய்துள்ளனர்.
டெல்லியில் கடந்த 4-ஆம்தேதி உள்ள சத்ராசல் அரங்கில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் தங்காருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், சாகர் தங்கார் பலத்த காயமடைந்தார். பின்னர், சாகர் தங்காரை அவரது நண்பர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி சாகர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாகர் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால், மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வந்த நிலையில் சுஷில் குமார் தலைமறைவானார். இந்நிலையில், டெல்லி தனிப்படை போலீசார் சுஷில் குமாரை கைது செய்துள்ளனர்.
சுஷில் குமார் நாட்டை விட்டு தப்பி செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தனர். இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. .
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025