Red Alert: விடா மழையால் மீண்டும் தெலங்கானா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

தெலங்கானாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள

Telangana schools

தெலங்கானாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளையும் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த 26,27 ஆகிய தேதிகளில் கனமழை காரணமாக விமுறையில் இருக்கும் தெலங்கானா மாநிலத்திற்கு மீண்டும் அறிவிப்பு வெளியாகியுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானா மாநிலம் முழுவதும் இடைவிடாத மழை மாற்றம் வெள்ளம் காரணமாக மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.