பயங்கர விபத்து...லாரி மீது மோதிய கார்...2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி.!!

கர்நாடகாவில் லாரியின் முன்பகுதியில் கார் மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

car-lorry Accident

கர்நாடகாவில் லாரியின் முன்பகுதியில் கார் மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடகாவின் குஷ்டகியில் லாரியின் முன்பகுதியில் கார் அதிவேகமாக மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில்  இறந்த அனைவரும் விஜயபுரத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள்  ராகவேந்திர காம்ப்ளே (28), ஜெயஸ்ரீ காம்ப்ளே (25), கஜப்பா பனாசோட் (36) அக்‌ஷய் சிவசரண் (22), ராக்கி (4) மற்றும் ராஷ்மிகா (2), ஆகியோர் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்து பற்றி காவல்துறையினர் கூறியதாவது வேகமாக வந்த கார் டயர் வெடித்ததைத் தொடர்ந்து டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி குஜராத் நோக்கிச் சென்ற லாரி மீது மோதியிருக்கலாம். இதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டது” என கூறியுள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் சித்தராமையா, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணத் தொகையாக அறிவித்துள்ளார்.

unknown node