லடாக்கின் கார்கிலில் உள்ள நியூ அஸ்ட்ரோடர்ஃப் மைதானத்திற்கு அருகிலுள்ள குர்பதாங்கில் வெடிகுண்டு வெடித்ததில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான்.
கர்பதங் பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அப்போது அங்கு கிடந்த பழைய வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்தது. இதில், 13வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும், 2 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் ஒரு சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவர் தற்போது கார்கில் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த சிறுவர்கள் அலி நக்கி மற்றும் முன்தாசிர் மெஹ்தி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இறந்தவர் முகமது என்ற சிறுவன் என தெரிய வந்துள்ளது. மூன்று பேரும் கர்சோங் பஷ்குமில் வசிப்பவர்கள் மற்றும் சுமார் 15 வயதுடையவர்கள். மேலும் திடீரென குண்டு வெடித்ததால் கார்கில் விமான நிலையம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
வெடிகுண்டு வெடித்ததையடைத்து, காவல்துறையினர் வெடித்த வெடிகுண்டு 1999-ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே கார்கிலில் நடந்த போரின்போது பயன்படுத்த வெடிகுண்டா? என விசாரணை நடந்தி வருகிறார்கள்.