ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், 2 பேர் உயிரிழப்பு.!

ஜம்மு காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் ஷோபியானில் சில நாட்களுக்கு முன் காஷ்மீரி பண்டிட் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு தற்போது மேலும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர், ஷோபியானில் உள்ள ஹர்மன் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில்  இரண்டு பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த மோனிஷ் குமார், ராம் சாகர் ஆகியோர் உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் பகுதியை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.

தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசியதால், அவர்கள் இருவரும் காயமடைந்து பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். வெடிகுண்டு வீசிய அந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டதாகவும், லஷ்கர்-இ-தொய்பா உடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

unknown node