,

செருப்பால் நடந்த கொடூரம்.. ஒருவர் கொலை.. கணவன் தலைமறைவு.! மனைவி கைது.!

By

வீட்டு வாசலுக்கு அருகில் செருப்புகளை வைப்பது தொடர்பான தகராறில் பக்கத்துவீட்டு நபரை கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. 

மகாராஷ்டிராவில் வீட்டு வாசலுக்கு அருகில் செருப்புகளை வைப்பது தொடர்பான தகராறில் தம்பதியினர் இணைந்து பக்கத்துவீட்டு நபரை கொலை செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள நயா நகரில் உள்ள தம்பதியினர் வீட்டின் கதவுகளுக்கு அருகில் செருப்புகளை வைப்பதற்காக அவர்களது பக்கத்து வீட்டு நபரோடு பல நாட்களாக தகராறு செய்து வந்துள்ளனர்.

இதே போல கடந்த சனிக்கிழமை இரவும் வாக்குவாதம் நடந்துள்ளது. அந்த வாக்குவாதம் சண்டையாக மாறியதில் தம்பதியினர் இணைந்து பக்கத்துவீட்டு நபரை கொலை செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்ததோடு கொலை செய்த பெண்ணை கைது செய்தனர். பெண்ணின் கணவரை கைது செய்வதற்குள் கணவர் தலைமறைவாகினார்.

இந்த சம்பவம் குறித்து நயா நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜிலானி சயீத் கூறுகையில், ” தம்பதியினர் மற்றும் பக்கத்துவீட்டு நபருக்கும் இடையில் நடந்த சண்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் 54 வயதான அப்சர் காத்ரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்” கூறினார்.

இந்த கொலையில் சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்துள்ளதாவும், அவரது கணவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும் அவர் மேலும் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக இருவர் மீது வழக்கு பதிவு செய்து கவத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dinasuvadu Media @2023