மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்து வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தோரிலிருந்து புனே நோக்கி சென்ற பேருந்து தார் மாவட்டம் கல்காட் சஞ்சய் என்ற பகுதியில் உள்ள பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், இது குறித்து , பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பேருந்து விபத்து மனவேதனை அளிக்கிறது. என் மனம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பம் பக்கம் இருக்கிறது. உள்ளூரர் அதிகரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ‘ என பிரதமர் பதிவிட்டுள்ளார்.
unknown node