உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் குல்தீப் சிங் செங்காருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம்.
2017ஆம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் குல்தீப் சிங் செங்காருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆயுள் தண்டனை கைதி குல்தீப் சிங் செங்கார், தனது மகள் திருமணத்திற்கு செல்ல அனுமதி கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 10 வரை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
அந்த ஜாமீன் சமயம், அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஜனவரி 16 (நேற்று) பிறப்பிக்கப்பட்டது. குல்தீப் சிங் செங்கார் மகள் திருமண சடங்குகள் கோரக்பூர் மற்றும் லக்னோவில் நடைபெற உள்ளது.