ஆஸ்கருடன் பிரதமரை சந்தித்த The Elephant Whisperers ஆவண படக்குழு.! மோடியின் மகிழ்ச்சி குறிப்பு...

இந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற 95-வது அகாடமி விருது வழங்கும் விழாவில், 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' சிறந்த ஆவணப்படம் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது.

இந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற 95-வது அகாடமி விருது வழங்கும் விழாவில், ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ சிறந்த ஆவணப்படம் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. ஆஸ்கார் விருதை வென்ற ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம் முதல் இந்தியத் தயாரிப்பு என்ற பெருமையைப் பெற்றது.

unknown node

இந்த ஆவணப்படத்தை பெண் இயக்குனர் கார்த்திகி என்பவர் இயக்கி இருந்தார், குனீத் மோங்கா தயாரித்தார். தற்போது, தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய இருவரும், ஆஸ்கர் விருதுடன் ஆஸ்கருடன் பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர்.

unknown node

இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, “தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படத்தின் புத்திசாலித்தனமும் வெற்றியும் உலக கவனத்தையும் பாராட்டையும் ஈர்த்துள்ளது. இன்று, அதனுடன் தொடர்புடைய சிறந்த குழுவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node

இதற்கிடையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் படத்தின் பின்னணியில் உள்ள படக்குழுவினருக்கு உதவியுள்ளனர். மேலும், படத்தில் நடித்துள்ள பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோருக்கும் ரொக்கப் பரிசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.