அந்நிய முதலீட்டில் முறைகேடு.? பிபிசி நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு.!

அந்நிய முதலீடு விவரங்களில் விதிகளை மீறியதாக பிபிசி நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அந்நிய முதலீடு விவரங்களில் விதிகளை மீறியதாக பிபிசி நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

கடந்த சில மதங்களுக்கு முன்னர் இந்தியாவையே பரபரப்பாக்கிய ஓர் சம்பவம் என்றால் அது பிரதமர் மோடி குறித்து பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆவண படம் தான். அந்த ஆவணப்படம் வெளியாகி , அதனை மத்திய அரசு தடை செய்து, அதனை மீறி பல்வேறு இடங்களில் குறிப்பாக மாணவர்கள் திரையிட்டு பெரும் சலசலப்பு உண்டானது.

வருமான வரி சோதனை :

unknown node

அந்த ஆவணப்பட விவகாரத்தை தொடர்ந்து, பிபிசி நிறுவனம் மீது வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை செய்தனர்;. பிபிசி செய்தி நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாகவும் கூறப்பட்டது. பிபிசி நிறுவனம் மீதான இந்த வருமான சோதனையை பல்வேறு அரசியல் கட்சியினர் வெளிப்படையாகவே ,இது ஒரு அரசியல் காழ்ப்புணர்வு என விமர்சனம் செய்தனர்.

அமலாக்கத்துறை வழக்குப்பதிவு :

unknown node

தற்போது வருமான வரித்துறை சோதனையை அடுத்து, அதில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களை கொண்டு , அந்நிய முதலீடுகளில் பிபிசி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், சட்டத்தை மீறி இந்தியாவில் முதலீடு செய்துள்ளாகவும் அமலாக்கத்துறையினர் பிபிசி நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது முதற்கட்ட வழக்குப்பதிவு மட்டுமே, இதன் மீதான விசாரணை தொடர்ந்து குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் அபராதம் விதிக்கபடும் என கூறப்படுகிறது.