மணமகனின் தந்தையும் , மணமகளின் தாயும் ஓடியதால் திருமணம் நின்றது.!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் கட்டர்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (48) (பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது) ஜவுளி தொழிலதிபர். இவர் மகனுக்கும் நவ்ஸரி பகுதியை

கடந்த 10-ம் தேதியில் இருந்து மணமகனின் தந்தை ,மணமகளின் தாயும்  காணவில்லை.

இதனால் இரு குடும்பத்தினரும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் கட்டர்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (48) (பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது) ஜவுளி தொழிலதிபர். இவர் மகனுக்கும் நவ்ஸரி பகுதியை சேர்ந்த வைர கைவினைஞர் ஒருவரின் மகளுக்கும் கடந்த வருடம் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

இவர்களின் திருமணத்தை வரும் பிப்ரவரி மாதம்  நடைபெற இருந்தது.இந்நிலையில் இருவீட்டினரும் அடிக்கடி பேசி, பழகி வந்து உள்ளனர்.இதில் மணமகனின் தந்தை ராஜேஷ்  , மணமகளின் தாய் சிந்து (வயது 46). (பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது) இவர்கள் இருவரும் ஏற்கனவே நண்பர்களக இருந்து உள்ளனர்.

இதையெடுத்து கடந்த 10-ம் தேதியில் இருந்து மணமகனின் தந்தை ,மணமகளின் தாயும்  காணவில்லை. இதனால் இரு குடும்பத்தினரும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளனர். இவர்கள் காணாமல் போனதால் இவர்கள் பிள்ளைகளின் திருமணம் நின்றுவிட்டது.

சிந்து , ராஜேஷ் இருவரும் திருமணத்திற்கு முன்பே நெருக்கமாக பழகி வந்து உள்ளனர். பின்னர் சிந்து ஒரு வைர கைவினைஞரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.