வெளிநாடுகளில் இருந்து மீண்டும் நன்கொடைகள் பெற பொற்கோவிலுக்கு அனுமதி – அமித் ஷா

வெளிநாடுகளில் இருந்து மீண்டும் நன்கொடைகள் பெற பொற்கோவிலுக்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து மீண்டும் நன்கொடைகள் பெற பொற்கோவிலுக்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

சீக்கியர்களின் புனித தலமாக பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரசில்  உள்ள பொற்கோயில்  கருதப்படுகிறது .கடந்த, 1984-ஆம் ஆண்டு இந்த கோயிலுக்கு வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெற வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. எனவே பொற்கோவிலை நிர்வகிக்கும் சீக்கிய குருத்வாரா கமிட்டி,  வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கான அனுமதியை மீண்டும் வழங்க வேண்டும்  என்று தொடர்ச்சியாக  கோரிக்கை விடுத்து வந்தது. கோரிக்கை தொடர்ந்து வைத்து வந்த நிலையில் மத்திய அரசு பொற்கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற  அனுமதி  அளித்துள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், வெளிநாடுகளில் இருந்து மீண்டும் நன்கொடைகள் பெற பொற்கோவிலுக்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

unknown node