தமிழகத்தை அடுத்து கேரளாவிலும் கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை ....!

After Tamil Nadu, tomatoes are being sold in Kerala for Rs. 160 per kg due to low supply.

தமிழகத்தை அடுத்து கேரளாவிலும் தக்காளி வரத்து குறைவால் கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்ததால் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அந்த வகையில் கேரளாவிலும் தற்பொழுது தக்காளியில் வரத்து குறைந்துள்ளதால், தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. எனவே தக்காளியின் மொத்த விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு ரூ 120 ஆக உயர்ந்துள்ளது. தக்காளியின் சில்லரை விலை கிலோ 140 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.