பட்டப்பகலில் ... நடுரோட்டில் ... மனைவியை அடித்த கணவன் ..! வைரலாகும் வீடியோ!

உத்தரபிரதேசம்: கடந்த ஜூன் 25 அன்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியில் பொது மக்கள் கண்னமுன்னே அதுவும் பரபரப்பான சாலையில் கணவர் ஒருவர் தனது மனைவியை

Husband Beat his Wife Brutally

உத்தரபிரதேசம்:கடந்த ஜூன் 25 அன்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியில் பொது மக்கள் கண்னமுன்னே அதுவும் பரபரப்பான சாலையில் கணவர் ஒருவர் தனது மனைவியை கொடூரமாக தாக்கி இருக்கிறார்.

இவர் மனைவியை கொடூரமாக தாக்குவதை அருகில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் இவர் அவரது மனைவியின் தலை முடியை பிடித்து இழுப்பதுடன் முதுகில் முழங்கையால் அடிப்பதையும் காணலாம்.

மேலும், இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டிருக்கும் பொழுது அருகில் இருந்த யாரும் அதை தடுக்க முன்வரவில்லை என்பது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த வீடீயோவை பார்த்து ஜான்சி போலீசார் நடவடிக்கை எடுத்ததன் பெயரில் மோகினி என்ற நவாபாத் காவல் நிலையத்தில் தனது கணவர் சிவம் யாதவ் மீது புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை விசாரித்து வருவதாகவும், மேலும் அந்த பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.