உ.ப-யில் காதலியை 6 துண்டுகளாக வெட்டி வீசிய காதலன்.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக டெல்லியில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை அப்தாப் என்ற இளைஞன் கழுத்தை நெரித்து கொலை செய்ததோடு அவரது உடலை 36 துண்டுகளாக வெட்டி டெல்லியில் பல இடங்களில் வீசியிருந்தார். இந்த நிலையில், அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள்ளாக உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் காதலியே கொலை செய்து ஆறு பாகங்களாக வெட்டிய சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் யாதவ். இவர் இஷாத்பூர் கிராமத்தில் வசித்து வந்த ஆராதனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு பின்பு கூட ஆராதனா பிரின்சுடன் உறவில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் பிரின்ஸ் பெற்றோர் மற்றும் உறவினர் உதவியுடன் ஆராதனாவை கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த நவம்பர் 9ஆம் தேதி பிரின்ஸ் ஆராதனாவே கோயிலுக்கு அழைத்து செல்வதாக கூட்டி சென்று, உறவினரின் உதவியுடன் கரும்புத் தோட்டத்திற்கு அழைத்து சென்று அவரை கழுத்தை நிறுத்தி கொலை செய்துள்ளார்.
பின் அவரது உடலை ஆறு துண்டுகளாக வெட்டி பையில் அடைத்து பல இடங்களில் வீசியுள்ளார். மேலும் அவரது தலையை குளத்தில் வீசியுள்ளார்.இந்த நிலையில் குளத்தில் அரை நிர்வாண சடலம் ஒன்றை அப்பகுதி மக்கள் கண்டெடுத்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பிரின்ஸ் என்பவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நாட்டு கை துப்பாக்கி, தோட்டா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினர், பெண்ணின் பாகங்கள் வீசிய இடத்தை கண்டறிய பிரின்ஸை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது பிரின்ஸ் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கி கொண்டு காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இதனையடுத்து, காவல்துறையினரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பிரின்ஸ் காயம் அடைந்துள்ளார். மேலும், பிரின்சுக்கு உதவியாக இருந்தவர்கள் தற்போது தலைமுறைவாக உள்ள நிலையில் அவர்களே காவல்துறையினர் தேடி வருகின்றனர்.