காய்கறி வியாபாரி வழங்கும் உணவை அழகாய் கொத்தி தின்னும் ஆண் மயில்.!

காய்கறி வியாபாரியான பெண் ஒருவர் ஆண் மயிலுக்கு உணவை வழங்க, அது அழகாய் கொத்தி தின்னும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

காய்கறி வியாபாரியான பெண் ஒருவர் ஆண் மயிலுக்கு உணவை வழங்க, அது அழகாய் கொத்தி தின்னும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

சாலையோரத்தில் காய்கறி கடை வைத்து நடத்தி வரும் பெண் ஒருவர், நீண்ட தோகையுடனான ஆண் மயில் ஒன்றிற்கு உணவு வழங்கியுள்ளார். பெண்ணின் கைகளில் இருக்கும் உணவை, அந்த ஆண் மயில் அழகாக கொத்தி தின்கிறது. இந்த அழகான காட்சிகளை கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் மனதால் பணக்காரர் என்று அந்த பெண்ணை பாராட்டி வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் வனத்துறை அமைச்சரான ரமேஷ் பாண்டே வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, விலங்குகளின் மீதான இரக்கம் மற்றும் அன்பின் உதாரணத்தை காட்டும் அழகான வீடியோ. இது அடுத்த தலைமுறைகளில் வலுவூட்டப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறியுள்ளார்.

unknown node