தமிழகத்தில் ரூ.285.86 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்-தேர்தல் ஆணையம்

The money and goods confiscated by the Rs 285.86 crore in Tamil Nadu - Election Commission

தமிழகத்தில் மட்டும் ரூ.285.86 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி  நடைபெற உள்ளது.

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

unknown node

தற்போது தமிழகத்தை பொருத்தவரை  ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பிரதான கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தது.அதன் மீதான பரிசீலனையும் நடைபெற்றது.

இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் ஆணையம் அதன் பணிகளை முழு வீச்சில் செய்து வருகின்றது.குறிப்பாக பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை  பறிமுதல் செய்து வருகின்றது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் நாடு முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டதாக இதுவரை ரூ.1,618 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் மட்டும் ரூ.285.86 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ரூ.285.86 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்-தேர்தல் ஆணையம்