கோவிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துறவி...! தற்கொலைக்கு பின் கிடைத்த குறிப்பு...! என்ன எழுதியிருந்தது...?

Manhar Muni Desai, a 70-year-old monk, hanged himself at a Jain temple in Mumbai's Gadkobar East.

மும்பையின் கட்கோபார் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு சமண கோவிலில் மன்ஹார் முனி தேசாய் என்ற 70 வயது துறவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மும்பையின் கட்கோபார் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு சமண கோவிலில் மன்ஹார் முனி தேசாய் என்ற 70 வயது துறவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட பின், அங்கிருந்து ஒரு கடிதம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், ‘ அதில் அவர் ஒரு கனவு கண்டதாகவும், அப்போது தனது குரு உலகத்தை தியாகம் செய்து, மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் அவருடன் சேருமாறு கேட்டுக் கொண்டதாகவும் எழுதியிருந்தார்.

இதுகுறித்து, பந்த் நகர் காவல் நிலைய மூத்த ஆய்வாளர் சுஷில் காம்ப்ளே அவர்கள் கூறுகையில், தேசாய் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் காணப்பட்டார். அவரை கட்கோபரில் உள்ள ராஜாவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

நாங்கள் ஒரு தற்கொலைக் குறிப்பைக் கண்டுபிடித்தோம். அதில் அவர் ஒரு கனவு கண்டதாகவும், அங்கு தனது குரு உலகத்தை தியாகம் செய்து, மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் அவருடன் சேருமாறு கேட்டுக் கொண்டதாகவும் இதனால் தான் தற்கொலை செய்து கொண்டேன் என்றும் எழுதப்பட்டிருந்தது என தெரிவித்தார்.

தூக்கிட்டு இறந்த துறவி 2012 மார்ச் மாதம் 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.