மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை துவங்கி உள்ளது.
மணிப்பூரில் இரு பிரிவினருக்குள் ஏற்பட்ட கலவரமானது 70 நாட்களை கடந்து இன்னும் முழுதாக ஓய்ந்தபாடில்லை. இந்த கலவரம் மேலும் பலரது நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வண்ணம் நேற்று வெளியான ஒரு வீடியோ வெளியாகி பலரது கண்டனங்களை பெற்றுள்ளது. இரு பெண்களை ஒரு கொடூர கும்பல் ஆடைகளின்றி இழுத்து செல்வது போல அந்த வீடியோவில் காட்டப்பட்டு இருந்தது.
இந்த வீடியோ இணையத்தில் பரவியதால் இருந்து மணிப்பூர் கலவரம் பூதாகரமாக வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்து உள்ளது. இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலில் ஒருவனை மணிப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது இந்திய மகளிர் ஆணையம். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் துவங்கி உள்ளது . முதற்கட்டமாக மணிப்பூர் டிஜிபியிடம் இந்திய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா இந்த சம்பவம் தொடர்பாக விசரணை விவரங்களை கேட்டறிந்துள்ள்ளார். மேலும், காவல்துறை விசாரணை நடத்தியது தொடர்பாக முழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
