அசாமில் ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ என்ற வைரசுக்கு இதுவரைக்கும் 13,000க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்து இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயால் பெரும் இழப்பை சந்தித்து வருகிறோம். இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில், நாட்டின் முதன்முறையாக அசாம் மாநிலத்தில் புதிதாக கண்டறியப்பட்டு இருக்கும் ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ என்ற வைரசுக்கு இதுவரைக்கும் 13,013 பன்றிகள் உயிரிழந்து இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் அசாமில் அரசு பன்றிகளை அழிக்காமல் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலில் இருந்து பன்றிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் பன்றிகளின் உயிரிழப்புக்கு காரணமான ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் இருந்துதான் பரவியது என்று கூறப்படுகிறது. இந்த பன்றி காய்ச்சல் முதலில் அருணாசலப் பிரதேசத்தில் தாக்கியது. இதைத்தொடர்ந்து தற்போது அசாமில் பன்றிகளை கொன்று வருகிறது. பின்னர் இந்த ப்ரிக்கன் ஸ்வைன் புளூ என்ற வைரசுக்கும் தற்போது கொன்று குவித்து வரும் கொரோனா வைரசுக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் வைரஸ் மனிதர்களின் உடலில் தங்கி இருந்து பன்றிகளை கொல்லக்கூடியது.
மேலும், நாட்டிலேயே முதலில் அசாமில்தான் இந்த ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ வைரசுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அசாமில் இதுவரை 13,013 பன்றிகள் உயிரிழந்துள்ளது. இதையடுத்து அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அதுல் போரா காஸிரங்கா அங்குள்ள தேசிய பூங்காவிற்கு சென்று பன்றிகள் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அதன்பின் பேசிய அவர், காட்டுப் பன்றிகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்கவும், வீட்டுப் பன்றிகள் பூங்காவுக்குள் நுழையாமல் இருக்கவும், பூங்காவுக்குட்பட்ட பகுதியில் 6 அடி ஆழத்திலும், 2 அடி அகலத்திலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…