இறால் பண்ணை உரிமையாளர் வீட்டில் கொள்ளை..!

புதுச்சேரியில் இறால் பண்ணை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 300 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

புதுச்சேரியில் இறால் பண்ணை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 300 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

முத்தியால்பேட்டையைச் சேர்ந்த இறால் பண்ணை தொழிலதிபரான சரவணபாபு என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ மற்றும் லாக்கர் திறக்கப்பட்டு, அதிலிருந்த 300 சவரன் தங்க நகை மற்றும் 10 லட்சம் ரொக்க பணம் மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.