இன்று நடைபெறுகின்ற 116 தொகுதிகளில் இதுவரை பதிவான வாக்கு சதவீத விபரங்கள்

This news gives information about The percentage of voting percentages in the 116 constituencies that are on today

இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.இதில் 2 கட்ட தேர்தல் முடிந்து உள்ளது. இந்நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இந்த மூன்றாம் கட்ட தேர்தலில் கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் என  116 தொகுதிகளுக்கு  தேர்தல் நடைபெறுகிறது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி

அசாமில் 22.71 சதவீதம்

பீகாரில் 13.03 சதவீதம்

உத்தர பிரதேசத்தில் 10.88 சதவீதம்

கோவாவில் 12.83 சதவீதம்

குஜராத்தில் 10.48 சதவீதம்

திரிபுராவில் 14.02 சதவீதம்,

மேற்கு வங்காளத்தில் 16.85 சதவீதம்

சத்தீஸ்கரில் 13.81 சதவீதம்

மகாராஷ்டிராவில் 7.97 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் குறைந்தபட்சமாக 1.90 சதவீத வாக்குகள் பதிவாகியது.